நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை. ஆர்ப்பாட்டம் மட்டுமே! - ரஞ்சன் ஜெயலால்
There is No Strike Tomorrow. Demonstration Only! - Ranjan Jayalal
நாளை வேலைநிறுத்த போராட்டம் இல்லை, ஆனால் பராமரிப்புச் சேவையிலுள்ள ஊழியர்களை கொழும்புக்கு அழைக்கிறோம் என மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
அனல்மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களை தமது தொழிற்சங்கம் அழைக்காது என்று அவர் தெரிவித்தார்.
யுகதனவி எல்என்ஜி மின்சார உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிராகவும், கேள்விப்பத்திர நடைமுறைகள் இன்றி எரிவாயுவை விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அமெரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தமைக்கு எதிராகவும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தொடா்ந்தும் தமது எதிா்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
There will be No Strike Tomorrow, but We are Inviting Maintenance workers to Colombo, Said Ranjan Jayalal, Convener of the Electricity Board's United Trade Union Confederation.
He said his union would not invite essential workers and emergency workers on duty at the Power Plants.
It is Noteworthy that the Ceylon Electricity Board (CEB) Unions have Repeatedly Expressed their Opposition to the Government's Agreement to transfer the Shares of the Yugadanavi LNG power plant to a US-based Company and to the Monopoly of the Distribution of gas Without a Tender Process to a US Private Company.
-----------------------------------------------------------------------------------------------------------------------------